மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘பெருச்சாழி’ படம் தற்போது தமிழில் ரீமேக்காக இருக்கிறது.

இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் உருவான படம் ‘பெருச்சாழி’.

இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஏற்கெனவே தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘கல்யாண சமையல் சாதம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, வைபவ், கிருஷ்ணா நடிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கிய ‘நிபுணன்’ சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே, அடுத்ததாக ‘பெருச்சாழி’யை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன்.

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் படம் பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்தார்.