Asianet News TamilAsianet News Tamil

‘’2.0’கேரள ரைட்ஸை வாங்க முட்டி மோதிய மோகன்லால்... என்னதான் ஆச்சு?

தனது மேக்ஸ்லேப்சினிமாஸ் அண்ட் எண்டெர்டெயிண்ட்மெண்ட்ஸ் கம்பெனிக்காக ஷங்கர், ரஜினியின் ‘2.0’ பட கேரள உரிமையை வாங்க நடிகர் மோகன்லால் கடும் முயற்சி மேற்கொண்டதாகவும், என்ன காரணத்தாலோ அவரது வேண்டுகோளை லைக்கா நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு அதிர்ச்சி செய்தி நடமாடி வருகிறது.

mohanlal fails to buy '2.0' kerala rights
Author
Kerala, First Published Nov 16, 2018, 11:15 AM IST

தனது மேக்ஸ்லேப்சினிமாஸ் அண்ட் எண்டெர்டெயிண்ட்மெண்ட்ஸ் கம்பெனிக்காக ஷங்கர், ரஜினியின் ‘2.0’ பட கேரள உரிமையை வாங்க நடிகர் மோகன்லால் கடும் முயற்சி மேற்கொண்டதாகவும், என்ன காரணத்தாலோ அவரது வேண்டுகோளை லைக்கா நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு அதிர்ச்சி செய்தி நடமாடி வருகிறது.

தனது நண்பர்கள் ஆண்டனி மற்றும் கே.சி.பாபு ஆகியோருடன் இணைந்து மேக்ஸ்லேப்சினிமாஸ் அண்ட் எண்டெர்டெயிண்ட்மெண்ட்ஸ் என்ற டிஸ்ட்ரிபியூசன் நிறுவனம் நடத்திவருகிறார் கேரள சூப்பர் ஸ்டாரான மோகன்லால். 2009-ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஏராளமான மலையாளப் படங்களை, குறிப்பாக வெளிநாட்டு உரிமைகளை வாங்கி விநியோகம் செய்து வருகிறது.mohanlal fails to buy '2.0' kerala rights

இந்நிலையில் வரும் 29ல் கேரளாவிலும் நேரடியாக ரிலீஸாகும் ‘2.0’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய விரும்பிய மோகன்லால், கேரளாவில் மற்ற எந்த ஒரு விநியோகஸ்தரும் தரத்தயாராக இருக்கும் விலையை விட சற்று அதிகமாகவே கொடுத்துக்கூட வாங்க தயாராக இருந்தாராம்.mohanlal fails to buy '2.0' kerala rights

ஆனால் என்ன காரணத்தாலோ, தகவல் தெரிந்திருந்தும்,  இயக்குநர் ஷங்கரும், ரஜினியும் இப்படத்தை மோகன்லால் வாங்கவிரும்புவதை பொருட்படுத்தவில்லை. இறுதியில் அந்த உரிமையை லைகா நிறுவனத்திடமிருந்து டோமிச்சன் என்பவர் 16 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios