mohanlaal is the first choice for kattappa character

பாகுபலி திரைப்படம், பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்திய ராஜ், அனுஷ்கா என இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் முக்கியமாக பாகுபலி திரைப்படத்திற்கு பின் நடிகர் சத்யராஜின் தரம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபலாமாக பாகுபலி திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக ராஜமௌலி முதலில் அணுகியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் பரிசீலிக்கபட்டவர் ஸ்ரீதேவி என்றும் அனுஷ்கா கதாபாத்திரத்திற்கு பரிசீலிக்கப்பட்டவர் நயன்தாரா என பல தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து.

தற்போது சத்யராஜ் நடித்த கட்டப்பா, கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜமௌலி மோகன்லாலை அணுகியபோது அவரிடம் அதிக படங்கள் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.