லாஸ்லியாவிற்கு முத்தம் கொடுத்த மோகன்..! கடுப்புல கன்னா பின்னான்னு கத்திய கமல்..! 

ஒவ்வொரு நாளும் சுவாரசியத்தை அதிகரித்து வரும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று சொல்லலாம். காரணம் முதல் வாரத்தில் பாத்திமாபாபு வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் வனிதா வெளியேறினார். 

அதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் போட்டியாளர்களிடம் கமல் நேரடியாக சில கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது தக்ஷன் வனிதாவை பற்றியும் அபிராமி பற்றியும் தெரிவித்திருந்தார். அபிராமியும் வனிதா பற்றி பேசி இருந்தார். இந்த நிலையில், இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என தெரிந்து கொள்ள உள்ளே சென்று, அங்குள்ள கவரை கொண்டு வாங்க என சாண்டியிடம் கமல் சொல்கிறார். 

மிகுந்த தயக்கத்தோடு உள்ளே செல்லும் சாண்டி, அதை கொண்டுவரவே, அவரையே அதிலுள்ள பெயரை கமலுக்கு மட்டும் காண்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். சாண்டியும் அவ்வாறே செய்கிறார். அதில், மோகன் வைத்யா பெயர் இடம் பெறுகிறது. அந்த லெட்டரை உரிய நபரிடம் கொண்டு சென்று கொடுக்கும்படி கமல் சாண்டியிடம்  தெரிவிக்கிறார்

சாண்டியும் மோகன் வைத்தியாவிடம் சென்று கட்டிப் பிடித்துக் கொள்கிறார். பின்னர் உடனடியாக மோகன் வைத்தியாவும் தான் வெளியேறப் போவதாக நினைத்து அழ தொடங்குகிறார். பின்னர் ஒவ்வொருவராக கட்டிப்பிடித்து அழுகிறார்கள். 

முதலில் சாண்டியை கட்டிப்பிடித்து அழும் மோகன் வைத்தியா, பின்னர் வனிதா,சாக்ஷி, அபிராமி, சேரன் என  அனைவரையும் கட்டிப்பிடித்து அழுது கடைசியாக லாஸ்லியா பக்கம் செல்கிறார். லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து நெற்றியில் முத்தமிட, அதுவரை அமைதி காத்த கமல், டென்ஷானாகி, "போதும் போதும் ரொம்ப முத்தம் கொடுக்க வேண்டாம்" என கமல் தெரிவிக்கவே அரங்கமே அதிர்கிறது.

இந்த நிலையில், நேற்று வனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய உடன் மீண்டும் அழ தொடங்குகிறார்  மோகன்..பிக்பாஸ் சீசன் 1 இல், ஸ்நேகனை விட மோகன் வைத்தியா ஸ்கோர் பண்ணிடுவாரு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.