modi and elizhabath queen see the special show for bahubali
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் பிரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும்ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் அதற்கு முன்னர் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்பட சர்வதேச பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் ‘பாகுபலி 2’ம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்பட பல பிரபலங்கள் ‘பாகுபலி 2’ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
