model ivana esther robert smith death

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ.. அதே போல் வெளிநாடுகளில் மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். தற்போதெல்லாம் சிறு வயதில் இருந்தே பெண்கள் மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக சினிமாவில் மாடலிங் துறையும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.

 தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டச்சு நாட்டைச் சேர்ந்த 19 வயது பிரபல மாடல் அழகி இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மித் என்பவர் மலேசியாவின் பட்டாலிங் ஜெயா என்ற இடத்தில் தங்கியுள்ளார்.

அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 வது மாடியில் நிர்வாணமாக நின்று கொண்டு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. போதையில் நிலை தடுமாறிய இவர் 20வது மாடியில் இருந்து கிழே விழுந்துள்ளார். இவருடன் அமெரிக்காவை சேர்த்த ஒரு பெண் மற்றும் ஆண் நண்பர் ஒருவரும் இருந்துள்ளனர். இவர்கள் தூங்கச் சென்ற பின் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

20வது மாடியில் இருந்து விழுந்த இவர் 6 வது மாடியில் உள்ள பால்கனியில் ரத்தவெள்ளத்தில், நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.