45 முடிந்து 46 வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விஜய்க்கு அவரது ‘பிகில்’ பட நாயகி நயன்தாரா, அந்த நாயகியின் நாயகன் விக்னேஷ் சிவன், இயக்குநர்கள் சேரன்,பார்த்திபன், பாண்டிராஜன்,சுசீந்திரன் என்று அனைவரும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வரும் நிலையில் நடுவில் ஒரு பொலிடிகல் சர்ப்ரைஸாக திமுகவின் அதிருப்தி தலைவர் மு.க. அழகிரி தந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிலர் 45 தான் என்று சொல்ல இன்னும் சிலர் 45 முடிஞ்சி 46 ஸ்டார்ட் ஆயிடுச்சி என்று தளபதி விஜயின் பிறந்த நாளைக் குழப்பிக்கொண்டிருக்க, அது பற்றி எந்தக் கவலையுமின்றி திரைத்துறையின் அத்தனை வி.ஐ.பிகளும் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்கள்.

ஆனால் அஜீத்தின் பிறந்தநாளுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவரே’ என்று துணை முதலமைச்சர் தொடங்கி ஏராளமான அரசியல்வாதிகளும் வாழ்த்தியிருந்தது விஜய்க்கு அறவே மிஸ்ஸிங். நேற்று திமுக தரப்பில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மட்டும் வாழ்த்தியிருந்த நிலையில்,  இன்று சுமார் 30 நிமிடங்கள் முன்னதாக மு.க. அழகிரி,...பிறந்தநாள் வாழ்த்துகள் நடிகர் விஜய் அவர்களே...உங்கள் ‘பிகில்’ வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.