தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை வாழ்த்தி அரசியல் பிரபலங்கள் போட்டுள்ள பதிவுகளை பார்க்கலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அண்ணாமலை வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான திரு ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Scroll to load tweet…

குஷ்பு வாழ்த்து

நமது தேசத்தின் ஒரே சூப்பர்ஸ்டார் ஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மற்றொரு பெருமைமிக்க ஆண்டை நீங்கள் கொண்டாடும் போது, ​​நாங்கள் உங்களைக் கொண்டாடுகிறோம், மிக அற்புதமான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் என பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

Scroll to load tweet…

வைரமுத்து வாழ்த்து

தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதை மிக்க விலைகொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை
என்னிடம் நீங்கள் பலம் பலவீனம் பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். உடல் மனம் வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும் வாழ்த்துகிறேன்.

Scroll to load tweet…

கமல்ஹாசன் வாழ்த்து

அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்தி உள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... 2 ரூபா சம்பளம் முதல் கருப்பா இருப்பதால் கழட்டிவிட்ட காதலிக்கு சவால்விட்டது வரை ரஜினி பற்றிய டாப் 10 சீக்ரெட்ஸ்