சென்னை லயோலா கல்லூரிக்கு போக முடியாமல் தவிக்கும் "மிஸ்  இந்தியா"..!

மிஸ்இந்தியா அனுக்ருதி "பட்டய கிளப்பும் பதில்கள்"...!

சமீபத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ருதி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மிக அழகாக பதில் கோரினார்

"Be Yourself" என்ற சொல்லை தான் அவர் அதிகமாக பயன்படுதினார். எந்த கேள்வி கேட்டாலும் முதலில் நாம் நாமாக இருக்க வேண்டும் என சிரித்துக்கொண்டே பதில் கூறினார்

அனுக்ருதியின் அடுத்த இலக்கு மிஸ் வேர்ல்ட் என தெரிவித்தார். வரும் டிசம்பர் மாதம் சீனாவில் நடைப்பெற உள்ள மிஸ் வேர்ல்ட் இல் கலந்துக்கொண்டு, என்னால் முடிந்த அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட முற்படுவேன்...இப்போதைக்கு அது தான் என்னுடைய லட்சியம்....

அப்போது படிப்பு பற்றி கேள்வி எழுப்பபபட்டது..இதற்கு பதில் அளித்த அனுக்ருதி...

சென்னை லயோலா கல்லூரியில் பிஏ பிரெஞ்ச் இரண்டாம் ஆண்டு  படித்து வருகிறேன். இப்போதைக்கு மிஸ் வேர்ல்ட் தான் தன்னுடைய இலக்கு....மிஸ் வேர்ல்ட் முடிந்த உடன் நான் மீண்டும் என்னுடைய படிப்பை தொடர்வேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

எந்த அளவிற்கு மிஸ் வேர்ல்ட்காக முயற்சி செய்து மிகவும் விருப்பத்துடன் கலந்துக்கொண்டேனோ..அந்த அளவிற்கு படிப்பும் எனக்கு பிடிக்கும் என தெரிவித்து உள்ளார்....

மேலும், தற்போதைக்கு மிஸ் வேர்ல்ட்காக தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதால், இரண்டாம் ஆண்டு படிப்பை வேறு கல்லூரிக்கு  மாற்றும் நிலை கூட ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும்   என்னுடைய படிப்பை முடித்து விடுவேன் என நம்பிக்கையாக  தெரிவித்து உள்ளார்.