இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்திய மேனன், ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள 'சைக்கோ' திரைப்படம் பல்வேறு திரையங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் கண் தெரியாதவராக, நடிப்பில் மிரட்டியுள்ளார் உதயநிதி.

இந்நிலையில் இந்த படத்தில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், எதார்த்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, பதார்தமாக வாயை விட்டு சிக்கியுள்ளார் மிஷ்கின்.

அதாவது, அவரிடம் பொதுவாக இரண்டு நடிகைகளை வைத்து படம் எடுத்தால், அவர்களுக்கும் ஏதேனும் பிரச்சனை வரும் என்று சொல்வார்கள், உங்களுக்கு அந்த அனுபவம் உள்ளதா என கேட்கப்பட்டுள்ளது.
 
இதற்கு மிஷ்கின், தற்போது தான் இயக்கிய சைக்கோ படத்தில் அதிதி ராவ் - நித்யா மேனன் என இருவர் நடித்தும் இவர்களுக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை. ஆனால் துப்பறிவால் படத்தில் அந்த அனுபவம் உள்ளது என கூறினார்.

எஸ்கலேட்டரில் வைத்து ஒரு சீன் எடுக்கப்பட்டது. அதில் ஆண்டிரியா ஜீன் போட்டிருந்தார். அணு இமானுவேல் லாங் குர்தா போட்டிருந்தார். அதனால் ஆண்ட்ரியா, அணு இமானுவேலிடம் பார்த்து போகுமாறு கூறினார். அதற்கு அணு, உங்க வேலைய நீங்கள் பாருங்கள் என்பது போல் சொன்னார்.

இதனால் தனக்கு மிகவும் கோவம் வந்துவிட்டது. அவரை நன்கு திட்டி விட்டேன். அந்த நேரத்தில் பக்கத்தில் ஏதாவது பூசணி காய் இருந்தால் அவருடைய மண்டையிலேயே உடைத்திருப்பேன் என மிஷ்கின் பேசியுள்ளார்.