mishkin about savarakkathi moive
விரைவில் வெளியாக உள்ள சவரக்கத்தி படத்தின், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, இந்த படத்தில் வெற்றிப்பட இயக்குனர்களான இயக்குனர் ராம் மாறும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசுகையில்... நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்ளை பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். “சவரக்கத்தி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இப்படத்தில் ராம் “பிச்சை” கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யே கட்டிப்பிடித்து கொண்டு வாழ்கின்ற ஓரு பார்பர் கதாபாத்திரம். நான் “மங்கா” என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம்.
நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும். ஓரு நாளில் நிகழும் கதை இப்படம்.
இதற்கிடையில் “சுமத்ரா” என்ற கேரக்டரில் பூர்ணா ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் சவரக்கத்தி.
முதல் முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை முழுக்க முழுக்க சென்னையை அப்படி இல்லாமல் ஓரு நகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
இப்படத்தில் ராம் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் நான் மங்கா கேரக்டரில் நடித்துள்ளேன். பொய்யையும், ரவடிதனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம்.
பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டது தான் சவரக்கத்தி. இப்படத்தில் இரண்டு டைரக்டர்கள் நடித்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக டைரக்ட் செய்துள்ளார். இப்படத்தின் தலைப்பு சவரக்கத்தி ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும் “கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். இப்படத்தில் 2 பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படம் நீண்ட காலம் தள்ளி போய்க்கொண்டே இருந்தாலும் தற்பொழுது பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. என கூறினார் இயக்குனர் மிஷ்கின்.
