லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு வெளியாக வேண்டிய படத்தை 2021ம் ஆண்டில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கொரோனாவால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 


தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும், பார்வையாளர்கள் கூட்டம் பெரிதாக வரவில்லை,. இந்நிலையில்,  மாஸ்டர் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிவிட்டதாக ஒருபுறமும், இல்லவே இல்லை அமேசான் பிரைமிற்கு 7 மாசத்துக்கு முன்னாடியே வித்தாச்சு என்றும் வதந்திகள் வட்டமிட ஆரம்பித்தன. இதனால் ரசிகர்களை விட தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!

ஆனால் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் ஓடிடி விற்பனைக்காக பேச்சுவார்த்தை நடப்பது உண்மை தான் என்றாலும், தியேட்டர் ரிலீசுக்குப் பிறகே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யவோம் என உறுதி அளித்தனர். ஆனால் பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வருமா? என்ற ஐயம் ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார். 

 

இதையும் படிங்க: பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது. அதுக்கு அடுத்து பொங்கல் வருது. மாஸ்டர் பட ரிலீசுக்காக கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளீர்கள். ஆனால் மாஸ்டர் ரிலீஸ் வருவதற்குள் கொரோனா காணாமல் போய்விடும் பாருங்கள் என தெரிவித்துள்ளார். இதுவரை குழப்பத்தில் இருந்த தளபதி ரசிகர்கள் அமைச்சரே மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தியதால் ஓவர் மகிழ்ச்சியில் உள்ளனர்.