தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை, திரைப்படங்கள் வெளியாகும் நாளன்றோ அல்லது சில நாட்களிலோ, அல்லது திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்போ தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளத்தின் மூலம் வெளியிடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தமிழக காவல்துறை என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்த  வெப்சைட்டின் ஐபி அட்ரஸை கடடுபிடிக்கக்கூட முடியவில்லை என சொல்லலாம், அந்த அளவிற்கு  அசைக்க முடியாத கிங்காக வலம் வந்தது. தமிழுசினிமாவின் சூப்பர்ஸ்டார்களின் kaalaa,kabaali சர்கார், 2.0 போன்ற பெரிய பட்ஜெட் படங்களை  ரிலீசுக்கு முன்பே சவால் விட்டு இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், தமிழக அரசின் சட்டங்களும், நீதிமன்றத்தின் உத்தரவும் அவர்களுக்கானதல்ல என்ற நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து தெரிவிக்கையில், “தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டுமே ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் மட்டுமே முடியும்”என தெரிவித்துள்ளார்.