உலக மக்களை தாண்டி, தற்போது தமிழகத்தையே அச்சுறுத்தி வரும், கொரோனாவால் எதிர்பாராத பல உயிரிழப்புகள் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது . அதே நேரத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைய துவங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே மக்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும் தொடர்ந்து சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

சாதாரண மக்கள் இன்றி, மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என மக்கள் பணியில் ஈடுபட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  இதில் கொரோனாவுக்கு சில அரசியல் தலைவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த,  மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் மகன் எம்.ஜி.சி சந்திரன் தற்போது உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர்,  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.