நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை சுருதிஹரிஹரன் 'மீ டூ' வில் பாலியல் புகார் கூறினார். 2015 - ல் 'நிபுணன்' மற்றும் 'விஸ்வமய' பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதை நடிகர் அர்ஜுன் மறுத்ததோடு, சுருதி ஹரிஹரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

மேலும் அர்ஜுன் மீது கப்பன் பார்க் போலீசில் சுருதி ஹரிகரன் அளித்த புகாரில் " அர்ஜுன் ஓட்டலில் தன்னிடம் அத்து மீறி நடந்ததாகவும் ரிசார்ட்டுக்கு வரும்படி அழைத்ததாகவும் கூறியிருந்தார்". இந்த புகார் தொடர்பாக அர்ஜுன் மீது பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், அவதூறு, பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல் ஆகிய 4  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த நிலையில் மீ டூ புகார் சொன்ன சுருதிஹாரிஹரனுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்தன. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். இதனால் பட உலகில் மளமளவென வளர்ந்த அவர், வாழ்க்கை திடீர் என இருண்டு போனது போல் இப்போது வருமானம் இல்லாமல் வீட்டில் சும்மா தான் இருக்கிறாராம்.

மேலும் சுருதி அவருடைய நட்பு வட்டாரத்தில், "நான் மீ டூவில் பாலியல் புகார் கூறியதற்கு முன்னால் வாரத்துக்கு 3  படங்களில் நடக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் புகார் சொன்ன பிறகு யாரும் வரவில்லை. பட வாய்ப்புகள் முழுமையாக நின்று  விட்டன என கண்ணீர் விட்டு கதறி வருகிறாராம்.