Methagu 2 Trailer: தமிழீழத்துக்கு எதிரா எந்த கொம்பன் வந்தாலும் விடமாட்டோம்... பரபரக்கும் ‘மேதகு 2’ டிரெய்லர்

‘மேதகு 2’ படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தைப் போல் இந்த திரைப்படமும் உலக தமிழர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Methagu 2 Trailer released

தமிழீழ விடுதலைக்காக பாடுபட்ட ஒப்பற்ற போராளியான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'மேதகு'. 

இலங்கையில் தமிழர்கள் பட்ட துயரத்தையும், அவர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தன்னுடைய இனத்திற்கே விடுதலை பெற்று தர ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வந்தான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். 

Methagu 2 Trailer released

கிட்டு இயக்கி இருந்த இப்படம் கடந்த ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மேதகு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினர். 

இந்த படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தைப் போல் இந்த திரைப்படமும் உலக தமிழர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் யோகேந்திரன் இயக்கி உள்ளார். 

Methagu 2 Trailer released

இந்நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. தொல்.திருமாவளவன், சீமான், சத்யராஜ், சேரன், ஜிவி பிரகாஷ், ஆரி அர்ஜுனன், சசிகுமார் என 30-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வெளியிட்டனர்.

பரபரக்கும் வசனங்களும், தமிழீழ விடுதலைக்காக அவர் பட்ட கஷ்டங்கள் குறித்த காட்சிகளும் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. விரைவில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios