Mersal teaser release in 92 countries
அட்லீ இயக்கத்தில், தெறி படத்துக்குப் பிறகு இளைய தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் இத்தனை நாள் காத்திருந்த மெர்சல் படத்தின் டீஸர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. தற்போது எத்தனை நாடுகளில் 'மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்கிற தகவலை, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மெர்சல் பட டீஸர் இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளில் வெளியாக இருக்கிறது என்பது தெரிகிறது.
