இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்து வரும் திரைப்படம் 'மெர்சல்'. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'சமந்தா', 'காஜல் அகர்வால்', மற்றும் 'நித்தியாமேனன்' ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுவதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு விநியோகிஸ்தர் உரிமையை அபிராமி ராமநாதன் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவியது. 

இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மேற்பார்வையாளரான அதிதி ரவீந்திரனாத் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

அதில், `மெர்சல்' படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.