mersal story leeked
இளைய தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் இந்த தீபாவளிக்கு சரவெடியாக வரவுள்ளது. இப்படத்தைப் பார்க்க லட்சக் கணக்கான விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கதை இதுதான் என்று சமூக வலைத் தளங்களில் ஒரு கதை உலா வருகின்றது.

இந்தக் கதைப் படி, ’சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஓர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்கிறார். அந்தக் கூட்டத்தில் தன்னைப் போலவே இருக்கும் மேஜிக் மேன் விஜயை சந்திக்கிறார். அதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் விஜய், அவரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் தன்னுடைய சகோதரர் தான் என்று தெரிந்து கொள்கிறார்.

பிறகு பிளாஷ் பேக் காட்சிகள் வருகின்றன. பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் விஜய்க்கு இரட்டைக் குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தையை ராஜஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கின்றார். ஒரு குழந்தையை இவர்கள் வளர்க்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஊர் கிராம மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வேலைகளைச் செய்ய, இதை அப்பா விஜய் எதிர்க்கின்றார்.

இதனால், அப்பா விஜய்யை எஸ்.ஜே.சூர்யா கொல்ல, அதைத் தொடர்ந்து கோவை சரளா ஒரு விஜயை தூக்கிச் சென்று சென்னையில் வளர்க்கின்றார். இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ர தாண்டவமே மீதிக் கதை’ என ஒரு கதை உலா வருகிறது. இந்தக் கதை உண்மையா இல்லையா என்பது தீபாவளி அன்றுதான் தெரியவரும்!
