தெறி படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் இணைந்து நடித்த திரைப்படம் 'மெர்சல்'. இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியானாலும் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 

திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோ அதே போல் ஏ.ஆர். ரகுமான் இசையில் அமைந்த பாடல்களும் இன்று வரை சக்க போடு போட்டு வருகிறது.

பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்காக எழுதிய அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தாலும்  'ஆளப் போறான் தமிழன்' பாடல் இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல் என அணைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் 'மெர்சல்' படத்தின் மொத்தப் பாடல்களும் 30 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, 'ஆளப் போறான் தமிழன்' பாடலின் வீடியோ 8 கோடியே 81 லட்சத்தையும், லிரிக் வீடியோ, 4 கோடியே 36 லட்சத்தையும் கடந்துள்ளன. மற்ற பாடல்களில், வீடியோ மற்றும் லிரிக் இரண்டையும் சேர்த்து 'மாச்சோ' பாடல் 6 கோடி, 'மெர்சல் அரசன்' பாடல் 4 கோடியே 90 லட்சம், 'நீதானே' பாடல் 5 கோடியே 60 லட்சம் பார்வைகளையும் கடந்து மொத்தமாக 30 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளன. வேறு எந்தப் படத்தின் பாடல்களும் இந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றதில்லை என்று கூறி விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.