Mersal movie release problem
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாஸ்ஸாக வெளிவர இருக்கும் திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக தீபாவளிக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ஏற்கெனவே கேளிக்கை வரி ரத்து செய்வார்களா? மெர்சல் திரைப்படம் சொன்ன தேதியில் வருமா? என்று மெர்சல் ரிலீஸில் குழப்பங்கள் பல நீடித்து வருகின்றது.
.jpg)
ஆனால் மெர்சல் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் கண்டிப்பாக மெர்சல் தீபாவளிக்கு நிச்சயம் வெளி வரும் என்று கூறியுள்ளனர், மேலும், டைட்டில் பிரச்சனை கூட தீர்ந்து படம் எதிர்ப்பார்த்தபடி வரும் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.
தற்போது மெர்சல் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். இதனால், மீண்டும் எதாவது பிரச்சனை வந்து படம் வரும் தீபாவளிக்கு வெளிவருமா? வராதா? என்கிற குழப்பத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
