Mersal is the first movie set to be released in Japan

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் மெர்சல் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளியாகவுள்ளது உள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் ஆன்லனிலேயே காத்துக் கொண்டு உள்ளனர்.

தமிழனின் வீரத்தை சொல்லும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். படம் ரிலீஸ்க்கு இன்னும் ஐந்தே நாள்கள் உள்ள நிலையில், படத்தின் மீதமுள்ள இறுதிக்கட்ட பணிகள் மும்பரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் பல இடங்களில் மெர்சல் அதிகமான தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

அதுமட்டுமல்ல, இதுவரை தமிழ் திரைபடங்களே வெளிவராத ஜப்பானில் Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya போன்ற இடங்களில் மெர்சல் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.