mersal got high profit in malaysia
மலேசியாவிலும் ‘மெர்சல்’ படம் வெளியாகி அங்கும் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.
நடிகர் விஜய் அன்று முதல் இன்று வரை அதிக ரசிகர்களை தனக்கென்று தக்க வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த தீபாவளி சமயத்தில் வெளியான படம் ‘மெர்சல்’.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.225 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
விஜய்க்கு மலேசியாவில் இதுவரை பெரிய மார்க்கெட் எதுவும் உருவாகவில்லை, ஆனால், அஜீத்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’ என இரண்டு படங்கள் அங்கு ரூ.10 கோடி வரை வசூல் செய்தது.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த ‘மெர்சல்’ மலேசியாவில் ரூ 18 கோடி வரை வசூல் செய்து மலேசியாவின் ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இன்னும் ரூ 2 கோடி வசூலித்தால் மலேசியாவில் ரஜினியின் ‘கபாலி’ சாதனையையும் ‘மெர்சல்’ முறியடித்துவிடும் என்பது கொசுறு தகவல்.
