mersal controversial scenes delete
ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.
பல்வேறு பிரச்னைகளைக் கடந்து விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. மெர்சல் திரைப்படம் வெளியானபிறகும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது.
மத்திய அரசின் திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் ஆகிய பாஜக தலைவர்கள், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பணமதிப்பிழப்பு மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்களையும் நீக்க தயாரிப்பாளர் முரளி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்குவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மெர்சல் பட தயாரிப்பாளர் முரளி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
