mersal censor issue

தீபாவளி தினத்தன்று விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்த இரட்டை தீபாவளியாக வெளிவந்த திரைப்படம் மெர்சல். 

ஏற்கெனவே பல சிக்கல்களை தாண்டி வெளிவந்த மெர்சல் படத்திற்கு, தேசியக் கட்சியே எதிர்க்கும் அளவிற்கு அமைந்தது இந்தப் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வரி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்கள். 

இந்தப் படத்தை எதிர்க்கும் விதத்தில், வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர். இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் இதைத் திரும்பப் பெறவேண்டும் வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையில் நாளை மெர்சல் படத்தின் சென்சார் சான்றிதழ் திரும்பப் பெறப்படுமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்.