Mersal box office collection Vijays film inching close to Rs 200 crore
மெர்சல் படம் ஆரம்பித்தநாள் முதலே சாதனை என்ற பட்டியலில் தான் முதல் இடம் பிடித்தது இதனால் என்னவோ படத்துக்கு பிரச்சனைகள் மேல் பிரச்சனை தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனாலும் இவை அனைத்தும் கடந்து மீண்டும் சாதனை என்ற ஒரே பெயருக்கு சொந்தமான தளபதி விஜய் தான் சாதனை மன்னன் என நிரூபித்திருக்கிறார்.
ரிலீசுக்கு முன்பாக பல சாதனைகளை நிகழ்த்திய விஜயின் ‘மெர்சல்’ ரிலிஸிற்கு பிறகு மிகப்பெரிய சோதனையை சந்தித்தது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில வசனங்களால் மிக பெரிய சர்ச்சைகள் எழுந்தது. பாஜகவின் இந்த இலவச விளம்பரமே மெர்சல் மெகா ஹிட் படமாக மாறியது. அதுவும் படத்திற்கு சாதகமாக முடிந்ததால், விஜய், தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்த ‘மெர்சல்’ குழு ஹாப்பியாக உள்ள நிலையில், மேலும் அவர்களை ஹாப்பியாக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மெர்சல் படத்தின் பாடல்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனை படைத்திருக்கிறதாம். தமிழ்ப் படங்களில் அதிவேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை ‘மெர்சல்’ பெற்றுள்ளது.

இது குறித்து சோனி மியூசிக் கூறியது, தமிழகத்தில் மட்டும் அல்ல, தென்னிந்திய திரைப்படங்களிலேயே ஆன்லைன் ஸ்டீமிங்கில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் 100 மில்லியன் ரசிகர்களை கடந்தது என்றால், அது மெர்சல் தான் என்கிறார்கள். விஜயின் ‘மெர்சல்’ நிகழ்த்தியிருக்கும் இந்த புது சாதனையால் விஜய் ரசிகர்கல் செம ஹாப்பியாம்.
அடுத்தது வசூல் விபரத்திற்கு வருவோம்...
விஜயின் மெர்சல் தமிழ் நாடு மட்டும் இல்லை வெளிநாடுகளிலும் மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது ஒரு சிலர் சில கட்சியின் எதிர்ப்பு அலை இந்த படத்துக்கு சாதகமாக அமைந்து இலவச விளம்பரமே மிக பெரிய வசூல் சாதனை என்று சொல்லி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் அளவில் மட்டுமல்ல அயல் நாடுகளில் வசூல் அபார சாதனை நிகழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் மாஸ் காட்டி வரும் "மெர்சல்" இதுவரை ரூ 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மட்டும் ரூ 90 கோடி வசூலை தாண்டி கபாலி பட சாதனையை முறியடித்துள்ளது. இதிலிருந்து அடுத்த தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் தளபதி விஜய் தான் என்பது முற்றிலும் உண்மையாகிவிட்டது.

சென்னையில் மட்டும் 10 நாட்களில் ரூ. 9.61 கோடி வரை வசூலித்திருக்கிறது. வடக்கு அமெரிக்கா, UK, பிரான்ஸ், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்படம் அமோகமான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் வெளிநாட்டில் மெர்சல் 3வது இடத்தை பிடித்துள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
