mens also sharing bed for the film chance said priyanka chopra
ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் பட வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.
அனுசரித்து போகாததால்,பட வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார் .
இந்நிலையில், தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து வாய் திறந்த பிரியங்கா சோப்ரா...
“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் என்னால் எதையும் செய்ய முடியவில்லை,காரணம்..அதிகாரம் பலம் படைத்தவர்களை எதிலும் எதிர்க்க முடியாமல் போனது என்றும் தெரிவித்தார்.
அதே போன்று, நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்” என்றும் தெரிவித்து உள்ளார்.
பிரியங்கா சோப்ராவின் இந்த பேச்சு பல கதாநாயகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
