தான் விபச்சாரி இல்லை என்று கூறி பிரபல நடிகை ஒருவர் கதறி அழுதுள்ளார்.  நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெஹ்ரீன். இந்தப்படத்தில் சுதீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்து இவர் அசத்தியிருப்பார். மேலும் ரெயில் ஆராரோ எனும் நெஞ்சில் துணிவிருந்தால் படப்பாடலில் இவரது பெர்பார்மன்ஸ் அனைவராலும் பேசப்பட்டது. நெஞ்சில் துணிவிருந்தால் படம் விமர்சகர்களின் அபிமானத்தை பெற்ற நிலையில் அனைவரும் மெஹ்ரீனின் நடிப்புத்திறனையும் பாராட்டியிருந்தனர்.
  இதனை தொடர்ந்து தமிழில் நோட்டா என்ற படத்திலும் மெஹ்ரீனுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல நடிகைகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த தயாரிப்பாளரைர் ராஜுவையும் அவரது மனைவி சந்திரிகாவையும் அந்நாட்’டு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் இருந்த போது நடிகை மெஹ்ரீனையும் அமெரிக்க போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியானது.
  
மேலும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ராஜு அழைப்பின் பேரிலேயே நடிகை மெஹ்ரீன் அமெரிக்கா சென்றதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் ஐதராபாத் திரும்பிய நடிகை மெஹ்ரீன் ஊடகங்களில் வெளியான தகவலை பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் தான் அமெரிக்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவே சென்றதாக மெஹ்ரீன் தெரிவித்தார். ஆனால் இது எடுபடாத நிலையில் ஒரு செய்திக்குறிப்பை மெஹ்ரீன் வெளியிட்டுள்ளார்.  அதில், தான் அமெரிக்காவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவே சென்றதாகவும், வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திரும்பியதாகவும் மெஹ்ரீன் தெரிவித்துள்ளார். அமெரிக்க விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகள் தன்னை விசாரித்ததாகவும், அப்போது தான் தெலுங்கு திரையுலக நடிகை என்று அவர்களிடம் கூறியதாகவும் மெஹ்ரீன் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் தெலுங்கு தயாரிப்பாளர் ராஜு விபச்சார வழக்கில் கைதானதை பற்றி என்னிடம் கூறியதாக மெஹ்ரீன் கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூறியதாகவும், உடனடியாக கலைநிகழ்ச்சிகளில் தான் பங்கேற்றதற்கான ஆதாரத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் என்னை விமானத்தில் ஏற அனுமதித்ததாகவும் மெஹ்ரீன் கூறியுள்ளார். உண்மை இப்படி இருக்க தன்னையும் அமெரிக்காவில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜுவையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறு என்றும் விளக்கம் அளித்துள்ளார்.