தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். பிற நடிகர், நடிகைகள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்தும் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் கொரோனா லாக்டவுனுக்குன் பிறகு படமாக்கப்பட உள்ளன. மிரட்டல் பின்னணி இசையுடன் வெளியாகியுள்ள ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...