ஹாலிவுட் திரையுலகில் துவங்கிய மீடூ புகார்,  கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகை சேர்ந்தவர்களையும் பதம் பார்த்துவிட்டது. இந்நிலையில் 'மீடூ' குறித்து, பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகைகள் சமீப காலமாக தொடர்ந்து, இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலர் மீது பாலியல் புகார் கூறி திரையுலகை அதிரவைத்த வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் நானா படேகர் மீது, தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.  நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா,  தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் 'மீடூ' வில் சிக்கினர்.

கங்கனா ரணாவத் 'குயின்' பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. மேலும் மாதுரி தீக்ஷித், ஜூஹீ சாவ்லா ஆகியோரை வைத்து 'குலாப் கேங்' படத்தை இயக்கிய சவுமிக் சென்,  பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.   இதை தொடர்ந்து மூன்று பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.

பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் விருந்து நிகழ்ச்சியில் மது போதை பொருளை கலந்து கொடுத்து, தன்னை சீரழித்து விட்டதாக பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா,  குற்றம் சாட்டினார். இப்படி அரங்கேறி வரும் சம்பவங்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் பிரபல இந்தி நடிகை மாதுரி தீக்ஷித்

இதுகுறித்து அவர் கூறுகையில்... இந்தி திரை உலகினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வருகின்றன. இதனை படிக்கும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் பற்றி எல்லாம் வேறு மாதிரி கணிப்புகள் இருந்தன.  ஆனால் இப்போது வரும் விஷயங்கள் திகைப்பாக இருக்கிறது. நடிகர் அலோக் நாத், இயக்குனர் சவுமிக் சென் ஆகியோரை எல்லோருக்கும் தெரியும் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக மாதுரி தீக்ஷித் கூறியுள்ளார்.