சமீப காலமாகவே இந்திய நடிகைகளின் விவாகரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் 2016 ஆண்டு பல அதிர்ச்சிகளை கொடுத்துள்ளது , அதில் முக்கியமானது நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் விவாகரத்து.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதே போல் ரஜினியின் மகள் சௌந்தர்யா விவாகரத்து, தற்போது விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாடிய ரம்பா என முக்கிய பிரபாலகள் உள்ளனர்.

இந்நிலையில் ரன் படம் மூலம் தமிழில் அறிமுகம் கொடுத்து , விஜய், விஷால், பரத் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வந்தது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லை என்றும்.

 இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் நீதி மன்ற படி ஏறுவார் மீரா என மலையாள பத்திரிகைகளில் கிசுகிசுக்க படுகிறது.