பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது நாளில் 16 ஆவது, போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்தவர் பிரபல மாடலும் நடிகையுமான மீரா மிதுன். இவர் உள்ளே வந்த நாளிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனைகளிலும் சிக்கி வருகிறார்.

நல்ல விஷயங்களை இவர் செய்தால் கூட,  அதுவும் இவருக்கே எதிராகவே திரும்பிவிடுகிறது. எனினும் இவர் தொடர்ந்து 2 வாரங்கள் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டும்,  மக்கள் காப்பாற்றிவிட்டனர். 

தற்போது இந்த முறையும், இவர் அதிகப்படியான போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.  இந்த வாரத்திலும் இவர் தப்புவாரா என்பதை, வாரத்தின் இறுதியில் தான் பார்க்கவேண்டும். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் மீரா.  கேப்டன் சாக்ஷியிடம், அனைவரும் தங்களை டீம்மை டீமோட்டிவேட் செய்வது போல் நடந்து கொண்டதாக கூறியதை தொடந்து, சாக்ஷி மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்.

பின் நான் இப்படி செய்ய சொல்லவே இல்லை என மீரா கூற அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். உடனே கோபமான சாக்ஷி, நீ லூசா... இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? என்ன பண்றனு எனக்கு தெரியல என கூறுகிறார். பின் மீரா மிதுன் அழும் காட்சியும் காட்டப்படுகிறது.