பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம், யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, உள்ளே உள்ள பிரபலங்களுக்கும் உள்ளது. நேற்றைய தினம் ரேஷ்மா மற்றும் மதுமிதா பேசும்போது, ரேஷ்மா இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவார் என தோன்றுவதாக கூறுகிறார். அவரை தொடர்ந்து பேசும், மதுமிதா கவின் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக பேசுகிறார்.

ஆனால் நேற்றைய தினத்தின், முதலிலேயே இத்தனை நாட்கள் இல்லாமல் கமல் ஹாசன் ரகசிய அறையில் இருந்து என்ட்ரி  கொடுத்தார். 

மேலும் இன்றைய ப்ரோமோ ஒன்றில், இந்த வாரம் ரகசிய அறையை உபயோகிக்கலாமா என கமல் கேட்கிறார். இதற்கு ஆடியன்ஸ் ஓகே சொல்கிறார்கள். 

எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து மீராவை வெளியேற்றுவது போல், வெளியேற்றி ரகசிய அறையில் வைத்து, ஒளித்து வைத்து விளையாட உள்ளது தெரிகிறது.  இன்று என்ன நடைபெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.