சிம்ரனையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... "வயசானாலும் உங்க அழகும், இளமையும் மாறவே இல்ல"... ஒரே புகழாரம் தான்... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல...!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வனிதாவிற்கு அடுத்து வீட்டிற்குள் கால் வைக்கும் போதே விவகாரத்துடன் வந்தவர் மீரா மிதுன், அழகி போட்டி நடத்துறதா சொல்லி இளம் பெண்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக ஜோ மைக்கேல் என்பவர் புகார் கூற. பிக்பாஸ் வீட்டிற்குள் ஏகப்பட்ட களேபரங்கள், பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். தமிழ்நாடே வேண்டான்னு, மும்பை போனார். அங்கேயும் சும்மா இருக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியும், அதன் பங்கேற்பாளர்கள் பற்றியும் வசைபாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

நடுவில் சென்னை பக்கம் வந்தவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை  என்பதால்தான் மும்பையில் செட்டிலாகி இருக்கிறேன் என்று தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார்.  அப்போது தமிழக  போலீசாருக்கு பத்தாயிரம் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் அவர்கள் வழக்கு பதிவு செய்வார்கள் என்ற பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து போலீசார் மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவ்வப்போது தனது அரைகுறை போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி வருகிறார். என்னதான் ஹாட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் மீரா மிதுன் போட்டாலும், தமிழக ரசிகர்களிடம் அவரது கவர்ச்சி எடுபட்டதாக தெரியவில்லை. 

மீரா மிதுன் என்றாலே பிரச்னை என்கிற அளவுக்கு அவரது பெயரைக் கேட்டாலே பிக்பாஸ் பிரபலங்கள் ஓடி ஒதுங்குகின்றனர். இப்படிபட்ட புகழுக்கு சொந்தக்காரியான மீரா மிதுன், சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்று செம வைரலாகி வருகிறது. தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அவரைப் பற்றி ஆகா, ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளார். எவ்வளவு அழகா இருக்காங்க. எல்லாருக்கும் வேகமா வயசாகும், ஆனால் சிம்ரனுக்கு மட்டும் வயதானதை கண்டுபிடிக்கவே முடியாது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையை ஆண்ட ராணி, எப்போதும் ஹீரோயின் என புகழ்ந்து தள்ளியுள்ளார். என்னதான் இருந்தாலும் மீரா மிதுன் கூட இருக்குறது சிம்ரன் இல்லையா, அதனால அந்த போட்டோ இண்டர்நெட்டை வெற லெவலில் அதிரவைத்துள்ளது.