பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார்.

லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். 

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை. 

என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கண்டித்தும் கூட, ஏன் போலீசில் புகார் கொடுத்தும் மீரா மிதுன் வாயை மூட முடியவில்லை.

ஆலியா பட் நடித்த சதக் 2 படத்தை போலவே உங்களுடைய படமும் டிஸ்லைக்குகளை அள்ளும் என விஜய், சூர்யாவிற்கு சாபம் விட்டார். இடையில் ரஜினியை அரசியலை விட்டு விலகி போக சொல்லி சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டார். விஜய் பற்றி மீரா மிதுன் போட்ட ட்வீட்கள் கடுப்பேற்றியதால் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனின்  லொக்கேஷனை கேட்டு வந்தனர். இந்நிலையில் மீரா தன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு, கோவை விஜய் ரசிகர்கள் இது உங்களுக்கு பொருந்தும். என் லோகேஷனை கண்டுபிடித்துவிட்டீர்கள் போன்று. எப்பொழுது வருகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

மறுபடியும் வேறு ட்வீட்டில், “என் கோவை லொகேஷன் ஷேர் ஆகியுள்ளது என்று நம்புகிறேன். நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள், விஜய்யின் கோழை ரசிகர்கள். நீங்கள் அனைவரும் விஜய்யை போன்று இசை வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பீர்கள்” என விஜய் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.