பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற உள்ளது என்பதை முன்னரே அறிவிக்கும் விதமாக, அதன் ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது.

அந்த வகையில், சற்று முன் வெளியாகியுள்ள ப்ரோமோவில் வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் சண்டை பற்றிய காட்சி தான் ஒளிபரப்பாகி உள்ளது.

இதுவரை, வனிதா, மது, அபி, என பலருடன் சண்டை வாங்கிய மீரா இப்போது சேரனிடம் சண்டை போடும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, திடீர் என மீரா... "நான் அங்கு வரும் போது, நீங்க ஒரு வார்த்தை சொன்னீர்கள். இதற்கு சேரன் என்ன என்று கேட்க, நீ வேலை செய்யாமல் எஸ்கேப் ஆவுறதே உன்னோட வேலையா இருக்கு என்பது போல் பேசுனீங்க என கேட்கிறார்.

இதற்கு சேரன் அமைதியாக சாப்பிட்டு கொண்டே, அது உனக்கு ஹட் ஆகி இருந்தால் சாரி என கூறுகிறார். அதே போல் "இனி இந்த வேலைக்கு உன்னை வா என நான் அழைக்க மாட்டேன். அதுக்கு ஒற்றுழைத்தால் நீ இந்த டீமில் இருக்கலாம் என கூறுகிறார். இதற்கு மீரா நான் ஒத்துழைப்பு தராத பெண், வேலைசெய்யாத பெண் என தன்னை வெளிப்படுத்த முயற்சிக்காதீர்கள் என கூறுகிறார்.

இதற்கு சேரன் காலையில் நானா பிரச்னையை ஸ்டார்ட் செய்தேன். என கோவமாக பேச மீரா அந்த இடத்தில் இருந்து, சேரனின் வார்த்தைக்கு மரியாதை தராமல் சென்றார். அபிராமி அவரை அழைக்க முயற்சி செய்தும் மீரா வெளியேறினார். இவர் இப்படி செய்வது ஓவியாவை உள்வாங்கி கொண்டு அவரை போலவே இருக்க முயல்வதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.