நடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் புதிய புதிய பரபரப்பை எழுப்பி வரும் நிலையிலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

குறிப்பாக, மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போது, இவருக்கு ஆதரவுகள் அதிகமாக இருந்த போதிலும், சேரன் தன் இடுப்பை பிடித்து, தூக்கியதாக இவர் கூறியது, மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இவர் மீது கோபத்தை வரவழைத்தது.

இந்நிலையில் சமீப காலமாக நித்தியானந்தா பற்றியும், ஆபாச தளத்தில் தன்னுடைய புகைப்படத்தை மாபிங் செய்து, மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய செல் போன் எண்ணையும் அதில் கசிய விட்டதாக கூறி... இப்படி பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பார்த்து கொண்டு கிரைம் போலீஸ் என்ன செய்கிறது என சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இவ்வளவு பேச்சு பேசிய மீரா மிதுன், தற்போது நீல நிற பிகினி உடையில் உடல் முழுவதும் தெரியும்படி சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ஏற்கனவே இவரை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... திட்டி தீர்த்து வருகிறார்கள். மேலும் இவரின் ரசிகை ஒருவர், மிகுந்த அன்புடன் மீராவிற்கு புத்தி சொல்லியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்... "மீரா அக்கா நீங்க ரொம்ப திரமை உள்ளவர்.... பெண் என்பவள் மதிக்கப் படும் சொத்து. அத இப்படி கொச்சை படுத்தாதீங்க.. நான் ஒரு முஸ்லிம் பெண் தலையில் இருக்கும் துப்பட்டா விலகினாலே மனம் கூசும். அன்னிய ஆன்கள் பார்த்து விடுவார்களோ என்று... நமது உடலை பார்த்து ரசிக்கும் உரிமை கணவனுக்கு மட்டும்தான் அக்கா.... தவறாக சொல்லவில்லை நானும் பெண் என்பதால் சொன்னேன் மனம் புண்படும்படி இருந்தால் மன்னிக்கவும்... (பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறேன். உங்களின் தைரியமான சுபாவம் பிடிக்கும்.  உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றி கொண்டால் வாழ்க்கையில் இன்னும் மேல வருவீர்கள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்)

மீரா மிதுனை பலர், கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்... பெண் ஒருவர் மிகுந்த அன்புடன் கூறியுள்ள பதிவிற்கு மீரா என்ன பதிலளிப்பர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.