பிக்பாஸ் வீட்டில், அடுக்கடுக்காக அனைவரிடமும் பல பிரச்சனைகளை செய்து வருபவர் மீரா மிதுன். எனவே இவரை சில போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் ஒரு தரப்பினர், இவருக்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மீரா மிதுன் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத சில தகவல்களை தெரிவித்துள்ளார் அவருடைய உறவினர் ஒருவர். 

அதாவது, இவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்ததும் தனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இது முறையாக ரிஜிஸ்டர் செய்யப்பட்ட திருமணம் இல்லை. அவருடன் நான் வாழ கூட இல்லை. காரணமே தெரியாமல் அவர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாக கூறினார். தன்னுடைய கணவருக்காக தான் காத்திருந்தும் பயன் இல்லை என்பதால் பிரிந்து விட்டதாக கூறினார்.

ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், மீரா அவருடைய கணவருடன் இரண்டு வருடங்கள் வாழ்ந்து விட்டு, பின் மீரா தான் விவாகரத்து கேட்டு, பிரிந்தார் என கூறுகிறார். மேலும் தற்போது மீரா அவருடைய கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.