Asianet News TamilAsianet News Tamil

விஜய் ரசிகர்களை திரும்ப, திரும்ப சீண்டும் மீரா மிதுன்... “மெர்சல்” மேட்டரையும் விட்டுவைக்காமல் ட்வீட்...!

மெர்சல் படத்தில் விஜய்க்கு மேஜிக் சொல்லிக்கொடுத்த ராமன் சர்மா என்ற நிபுணர் தனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என அப்போது கூறியிருந்தார். அதை இங்கே தேவையில்லாமல் சொல்லிக்காட்டி தளபதி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் மீரா மிதுன். 

Meera Mithun again kidding Vijay Fans Mersal Emoji Celebration
Author
Chennai, First Published Aug 18, 2020, 8:23 PM IST

பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார்.

Meera Mithun again kidding Vijay Fans Mersal Emoji Celebration

லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கண்டித்தும் கூட, ஏன் போலீசில் புகார் கொடுத்தும் மீரா மிதுன் வாயை மூட முடியவில்லை.

Meera Mithun again kidding Vijay Fans Mersal Emoji Celebration

சமீபத்தில் மீரா தன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு, கோவை விஜய் ரசிகர்கள் இது உங்களுக்கு பொருந்தும். என் லோகேஷனை கண்டுபிடித்துவிட்டீர்கள் போன்று. எப்பொழுது வருகிறீர்கள் என்று கேட்டிருந்தார். மேலும் “என் கோவை லொகேஷன் ஷேர் ஆகியுள்ளது என்று நம்புகிறேன். நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள், விஜய்யின் கோழை ரசிகர்கள். நீங்கள் அனைவரும் விஜய்யை போன்று இசை வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பீர்கள்” என விஜய் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இது ஏற்கனவே விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியிருந்தது.

Meera Mithun again kidding Vijay Fans Mersal Emoji Celebration

 

இன்றுடன் மெர்சல் படத்தி இமோஜியை வெளியிட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. அதை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வந்தனர். அதைப்பற்றியும் தேவையில்லாமல் விமர்சித்துள்ள மீரா மிதுன், அந்த இமோஜிக்கு செலவு செய்த பணத்தை கூட படம் வசூல் செய்யவில்லை. ராமன் மேஜிக் உங்களுக்கான தொகை கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். இல்லை என்றால் விஜய்க்கு போன் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

மெர்சல் படத்தில் விஜய்க்கு மேஜிக் சொல்லிக்கொடுத்த ராமன் சர்மா என்ற நிபுணர் தனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என அப்போது கூறியிருந்தார். அதை இங்கே தேவையில்லாமல் சொல்லிக்காட்டி தளபதி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் மீரா மிதுன். 

Follow Us:
Download App:
  • android
  • ios