பிரபல மாடலும், மிஸ் இந்தியா அழகி பட்டமும் வென்ற மீரா மிதுன் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர் என்பது அனைவரும் அறிந்தது தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இவரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாவே இருப்பதாக கருதுகிறார்கள் நெட்டிசன்கள்.

சமீபத்தில் படு மோசமான பிகினி உடையில் போட்டோ வெளியிட்டு சூடேற்றிய இவர், தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், நித்தியானந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தால் உடனே போய், சேர்ந்து விடுவேன் என்றும், அவர் பேசுவது எல்லாம் சரி என்றும், ஆனால் அவரை ஏன் எல்லோரும் ட்ரோல் செய்யுராங்கனு தான் தெரியல என பேசியுள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் என தர்ஷனை காதலிப்பதாக கூறி பகீர் கிளப்பிய இவர், தற்போது தர்ஷன் காதலி சனம் ஷெட்டியின் இடத்தில் நீங்கள்  இருந்தால் என்ன செய்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தர்ஷன் மிகவும் நல்லவர் என்றும், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது இப்போது தான் தெரிகிறது. சில விஷயங்களை வெளிப்படையாக கூற முடியாது. சனம் ஷெட்டியின் இடத்தில் நான் இருந்தால், என்னை கண்டு கொள்ளாத ஒரு காதல் தேவை இல்லை என்று தான் முடிவு செய்வேன்.

ஒருவர் என்மீது காதலோடு இருந்தால் மட்டுமே அவரை நேசிக்க முடியும், அது இல்லாத போது யார் நமீது பாசம் காட்டுகிறார்களோ அதை தான் தேர்வு செய்யமுடியும் என்பது போல் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: 44 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தாயான ஷில்பா ஷெட்டி..! 

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின், யாருடனும் தொடர்பில் இல்லை என்றும், கடைசியாக தன வாழ்க்கையில் இருந்த  காதல் திருமண முறிவுக்கு பின் இல்லை. இப்போது வரை தான் சிங்கிள் என்றும், பழைய காதலின் வலியை இன்னும் மதனை விட்டு நீங்கவில்லை என இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன் என்பது குறிப்பிடத்தக்கது.