Asianet News TamilAsianet News Tamil

பார்வதி மேனன், ரம்யா நம்பீசன் ... தேவதைகளை வீட்டில் முடக்கும் கேரள நடிகர்கள்


கேரளாவின் முன்னணி நடிகர்களின்  நடத்தை குறித்து கேள்வி எழுப்பும் நடிகைகளை ஓரங்கட்டுவதில் அனைத்து நடிகர்களும் ஒரே அலைவரிசையில் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

Me Too movement participants ignored in kerala
Author
Kerala, First Published Nov 10, 2018, 4:13 PM IST

கேரளாவின் முன்னணி நடிகர்களின்  நடத்தை குறித்து கேள்வி எழுப்பும் நடிகைகளை ஓரங்கட்டுவதில் அனைத்து நடிகர்களும் ஒரே அலைவரிசையில் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

கேரளாவின் மற்றொரு முன்னணி நடிகையான பார்வதி மேனனும் இரு தினங்களுக்கு முன்னர் இதே மாதிரியான குற்றச்சாட்டுகளைக் கூறி தனக்கு ஒரு வருடமாக பட வாய்ப்புகளே வருவதே இல்லை. இப்படியே துரத்திவிட்டுவிட்டால் ஹோட்டலோ, காபி ஷாப்போ துவங்கிவிட்டுக் காணாமல் போய்விடுவேன் என்று நினைக்கிறார்களோ என்பதாக பதிவிட்டிருந்தார்.Me Too movement participants ignored in kerala

இந்நிலையில் மேற்படி அதே புகாருடன் ரம்யா நம்பீசனும் களம் இறங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ’மீ டூ இயக்கம் ஒரு பெரும் அலையாக இப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஓராண்டுக்கு முன்பே கேரள சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள், ‘டபுள்யூசிசி’[women in film collective] எனும் சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பை உருவாக்கினார்கள். அதில் நானும்,பத்மப்ரியா, பார்வதி மேனன், இயக்குநர் அஞ்சலி மேனன் போன்றோர் ஆக்டிவாக செயல்படுகிறோம்.Me Too movement participants ignored in kerala

தங்களுடைய பிரச்சினைகளை நியாயமான முறையில் பேசத் தொடங்கியவர்களில் பலரை இந்த ஓராண்டில் கட்டம் கட்டி ஒதுக்கியிருக்கிறது கேரள திரையுலகம் . கேள்வி கேட்கிறேன் என்பதற்காகவே நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கேரள நடிகர்கள் ஒரே அலைவரிசையில் செயல்படுகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

பார்வதி மேனன், ரம்யா நம்பீசன் போன்ற வரம் வாங்கி வந்த தேவதைகளை வீட்டில் முடக்கும் ஒரே காரணத்துக்காகவே கேரளத்தை இன்னொருமுறை வெள்ளம் சூழ்ந்தாலும் தவறில்லை என்றே தோணுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios