படத்தில் தன்னுடன் ஜோடியாக நாயகிக்கு ஷூட்டிங்குக்கு அப்புறமும் கதாநாயகன் லவ் டார்ச்சர் கொடுப்பதால் படத்தின் புரமோஷனுக்கு அவர் மறுக்கிறார் என ‘மயூரன்’படத் தயாரிப்பாளர் புலம்பி வருவதாகத் தகவல்.

ஆனந்த் சாமி (லென்ஸ் பட நாயகன்) அமுதவாணன், அஸ்மிதா, பாலாஜி ராதாகிருஷ்ணன், சிவா, மற்றும் கலை ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சாஷி என்பவர் நடித்துள்ளார்.இவர் ஜார்கண்டைசேர்ந்தவர். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார் பி.ராமன், ஜி.சந்திரசேகரன்,எம்.பி.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். 

கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு. முதல் படத்திலேயே இப்படி ஆட்டம் போட்டால் வெளங்குன மாதிரிதான்.