இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் “ஆர்ட்டிகல் 15”. கிராமப்புறங்களில் நடைபெறும் சாதிய வன்முறைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பதை பற்றிய இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் பெற்று, நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: “நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ”... தீயாய் தெறிக்கும் வசனங்களுடன் வெளியானது க/பெ ரணசிங்கம் டீசர்...!

இப்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. நடிகர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர். கனா படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இதுவரை தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்த அருண்ராஜா காமராஜ் தான் “ஆர்ட்டிகல் 15” தமிழ் ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளாராம். தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை இயக்கி வரும் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போனிகபூர், உதயநிதி ஸ்டாலின் இருவருமே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், அவர்கள் தான் அருண்ராஜா காமராஜை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.