தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மார்டன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க...!

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்ற கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. அதனால் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. ஓடிடி ரிலீஸ் என்றாலும் படம் மொத்தம் 100 கோடிக்கு பிசினஸ் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

 

இதையும் படிங்க: “பீட்டர் பாலை அன்னைக்கே செருப்பால அடிச்சு விரட்டியிருப்பேன்”... கொந்தளித்த வனிதா...!

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் சொன்னபடி அக்டோபர் 30ம் தேதியில் புது சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் சூரரைப்போற்று படக்குழு இன்னும் பெறவில்லை என்றும் அதனால் இந்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கான அமேசான் பட்டியலில் இருந்தும் சூரரைப் போற்று திரைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேறு தேதியில் படத்தை ரிலீஸ் செய்யலாமா? என படக்குழு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.