சந்தானம், யோகிபாபுவை வைத்து டகால் படத்தை தயாரித்த எஸ்.பி. சவுத்தரி யோகிபாபுவை வைத்து புதுமையான முயற்சியை கையில் எடுத்துள்ளார். டகால் பட தயாரிப்பாளர் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்ல அந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்று வேலைகளையும் அவர் தான் பார்த்துள்ளாராம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு  நடத்தப்படாமல் உள்ளது.


 காமெடி ஹீரோவில் இருந்து ஹீரோவாக புரோமோஷன் வாங்கிய யோகிபாபு இப்பது கதை, திரைக்கதை, வசனம் என புதுப்புது அவதாரங்களை எடுக்க உள்ளார். அதுமட்டுமல்லாது, யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம்  “கோலமாவு கோகிலா”. நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயனை விரட்டி, விரட்டி காதலிக்கும் சூப்பர் பாயாக அந்தர் செய்திருந்தார் யோகிபாபு. 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

யோகிபாபுவிற்கு என்று தனியாக பாட்டு, அதில் அவரு ஆடுன வேற லெவல் ஸ்டெப்ஸ் எல்லாம் தாறுமாறு வைரலானது. இந்த படத்திற்கு பிறகு தான் தனது சொந்த வீட்டு கிரகபிரவேசத்தில் கூட  பங்கேற்க முடியாத அளவிற்கு பிசியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் யோகிபாபு. அதே அதிர்ஷ்டம் இப்போது இரண்டாவது முறையாக யோகிபாபு வீட்டு காலிங் பெல்லை அடித்துள்ளது.

இதையும் படிங்க:  வெளிநாட்டில் இருக்கும் விஜய் மகனின் தற்போதைய நிலை என்ன?... உண்மை நிலவரம் இதுதான்...!

அது என்னவென்றால் யோகிபாபுவின் இந்த புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார்களாம். ஒரு வேலை நயன் ஓ.கே.சொல்லிவிட்டால், யோகிபாபுவின் செகன்ட் இன்னிங்ஸ் செம்ம சூப்பர் தான். அப்படி நயன் ஓ.கே.சொல்லவில்லை என்றால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையாக காஜல் அகர்வாலிடமும் கால்ஷீட் கேட்டுள்ளார்களாம். இரண்டு பேரில் யார் ஓ.கே. சொன்னாலும் புது மாப்பிள்ளை யோகிபாபு காட்டில் மழை தான்....!