கடந்த சில நாட்களாக, பிக்பாஸ் வீட்டில் கிராமத்து டாஸ்க் நடந்தது. இந்த டாஸ்கில் கிராமத்தில் உள்ள நாட்டாமை, மைனர், சமையல் பாட்டி, உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களை பிக்பாஸ் வீட்டில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இந்த ட்ராமாவில், நன்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி விளையாடியவர் என, மீராவை தேர்வு செய்ததுள்ளனர் சில போட்டியாளர்கள்.

இதனால் கோபமான மது, சில சமயங்களில் தன்னுடைய கதாப்பாத்திரத்தில் இருந்து வெளியேறி, அதனை பர்சனலாக எடுத்து கொண்டவர் மீரா, அவரை எப்படி சொல்வீர்கள் என சத்தம் போடுகிறார். இவருக்கு சப்போர்ட் செய்து, சேரனும் வரிந்து கொட்டி கொண்டு வருகிறார். மேலும் அவரிடம் நிறைய தவறுகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

இவை அனைத்தையும், பார்த்து கொண்டிருந்த மீரா, மது நன்றாக விளையாடி இருந்தால் அவருக்கே கொடுத்துடுங்க என பெருந்தன்மையாக விட்டு கொடுப்பதுபோல் பேசி விட்டு அந்த இடத்தை விட்டு செல்லும் கட்சி இடம்பெற்றுள்ளது.