பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர், பிரபல காமெடி நடிகை மதுமிதா. இவருக்கு தற்போது பிக்பாஸ் வீடே எதிரியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அபிராமி என்றாலும், மது சொல்லவருவது என்ன என்பதை கூட கேட்காமல் அனைவருமே அபிராமிக்கு மட்டுமே சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

இதனால் தன்னுடைய மன வேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல், குட்டி சிவ லிங்கத்தை வைத்து அழுது கொண்டே அதனுடன் பேசுகிறார். "இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன். என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்ல பிரச்சனைனா பரவால.. இங்கே எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு" என கண்ணீருடன் அழுதபடி பேசுகிறார் மதுமிதா.

பிக்பாஸ் வீடே தனக்கு எதிராக திரும்பி விட்டதாக நினைத்து, மனதளவில் இவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், எலிமினேஷன் ஆகாவிட்டாலும், இவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.