வனிதா வந்தாலே பிரச்னையும் தானா... வாச கதவை திறந்து கொண்டு வருமோ...? என ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் ஒரு கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். மேலும் நிகழ்ச்சி இப்போது தான் சூடு பிடித்துள்ளது என்பதும் அவர்களுடைய கருத்தாக உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், திடீரென ஆவேசமான மதுமிதா ஆண்கள்,  பெண்களை அடக்குவதாகவும், ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் ஒரு புதுவித குற்றச்சாட்டை கூறி அதிர வைத்தார். 

சேரன் உள்பட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மற்ற  ஆண் போட்டியாளர்கள் இத்தனை இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்தாலும், தொடந்து தன்னுடைய கருத்தில் ஆணி தனமாக இருக்கிறார் மது. இது புதிய பிரச்சனை பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கும் ஆதாரமாக உள்ளது.

கவினை வம்புக்கு இழுக்கும் மதுமிதா, 'உன்னை போல் நான்கு பெண்களை பயன்படுத்தி இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோவமாக கூறுகிறார். அப்போது தர்ஷன் 'நான்கு பெண்கள் ஒரு ஆணை சுற்றிச்சுற்றி வந்தது குறித்து ஏன் கேட்க மாட்டீறீங்க' என்ற புத்திசாலித்தனமான கேள்விக்கு மதுமிதாவிடம் அதுவும் கூறாமல் செல்கிறார்.

இதனையடுத்து திடீரென மதுமிதாவின் அருகே வரும் லாஸ்லியா நான்கு பெண்களில் நானும் சம்பந்தப்பட்டிருப்பதால் நீங்கள் அதுகுறித்து தயவுசெய்து கதைக்க வேண்டாம்' என்று கோபமாக கூறுகிறார். 

மதுமிதா  இது போன்ற கேள்விகளை முன்பே கேட்காமல், இப்போது வந்து கேட்பது, கடந்த வாரம் போன் கால் செய்த ரசிகை முன்பு போல் இல்லாமல் இப்போது நடிப்பது போல் தோன்றுவதாக கூறியதால், ஒரு வேலை மீண்டும் கவினிடம் சண்டைக்கு பாய்கிறாரோ என்கிற சந்தேகத்தை வரவழைத்துள்ளது.