'சின்ன பாப்பா பெரிய பாப்பா', ' ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடி நடிகை என்று தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகை மதுமிதா.

நேற்று இவர், இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்கிற பெண்ணின் கையை ரத்தம் சொட்ட சொட்ட கடித்து குதறியதாக ஒரு தகவல் பரவியது. இது குறித்து தற்போது ஒரு வீடியோ மூலம் மதுமிதா விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், தான் தற்போது வளசரவாக்கத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடி இருப்பில் கடத்த 6 மாதமாக வசித்து வருவதாகவும். இந்த வீட்டை தனக்கு வாங்கி கொடுத்தது உஷாவின் கணவர் தான், அவர் தன்னிடம் ஆக்ட்டிங் ஓட்டுநராக வேலை செய்தார். அவர் தான் தன்னுடைய மனைவி  வீடு வாங்கித்தரும் புரோக்கர் வேலை செய்வதாக கூறி அறிமுகம் கொடுத்தார். மேலும் இந்த வீடு வாங்கி கொடுத்ததற்கு அவருக்கு 60 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் வீடு நிர்வாக செலவு அதிகமாக காண்பித்து உஷா குளறுபடி செய்தது கண்டுபிடிக்க பட்ட உடன் அந்த அப்பார்ட்மென்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி பேசி அவரை அந்த நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம். இந்த கடுப்பில் இவர் அடிக்கடி, அந்த குடி இருப்பில் உள்ளவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விதத்தில், கார் கண்ணாடிகளை உடைப்பது, படிக்கட்டில் எண்ணையை ஊற்றி விடுவது, தண்ணீர் குழாய்களை உடைத்து விடுவது போல் செய்ததால் ஏற்கனவே அவர் மீது போலீசில்  புகார் கொடுத்துள்ளோம் என்றும் மதுமிதா தெரிவித்தார்.

பின் இதனால் ஏற்கனவே போலீசார் உஷாவை அழைத்து விசாரணை செய்தனர், அதன் பின்னர் அவர் கன்னட காரர்களை இப்படி நடத்துறியா? என கூறி தன்னை கீழே தள்ளிவிட்டு சண்டை போட்டார். தனக்கும் மண்டை பகுதியில் உள் காயம் ஏற்பட்டுள்ளது அதற்கான சிகிச்சையும் தற்போது போய் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையில் அவர் அடிக்கும் போது தன்னை காப்பாற்றி கொள்ள அவருடைய கையில் நான் லேசாக தான் கடித்தேன், உடனே அவர் தன்னுடைய போன் மற்றும் இது குறித்து விசாரிக்க வந்திருந்த போலீஸ் அதிகாரியின் தொலைபேசிகளை எடுத்து சென்று உடைத்து நான் கடித்த  இடத்தில் மேலும் கத்தியை கொண்டு கீறி நான் ரத்தம் வரும் அளவிற்கு கடித்ததாக பொய் சொல்லி தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்து விட்டதாக அந்த வீடியோவில் மதுமிதா தெரிவித்துள்ளார்.