லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,  மாஸ்டர் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிவிட்டதாக ஒருபுறமும், இல்லவே இல்லை அமேசான் பிரைமிற்கு 7 மாசத்துக்கு முன்னாடியே வித்தாச்சு என்றும் வதந்திகள் வட்டமிட ஆரம்பித்தன. இதனால் ரசிகர்களை விட தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

 

இதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!

ஆனால் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் ஓடிடி விற்பனைக்காக பேச்சுவார்த்தை நடப்பது உண்மை தான் என்றாலும், தியேட்டர் ரிலீசுக்குப் பிறகே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யவோம் என உறுதி அளித்தனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் குதித்து கும்மாளம் போட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!

இதுபோதாது என்று தீபாவளி ட்ரீட்டாக வெளியான மாஸ்டர் டீசர் சாதனைக்கு மேல் சாதனையாக படைத்து வருகிறது. டீசர் வெளியான 16 மணி நேரத்திலேயே ஒரு மணி நேரத்திற்கு 1 மில்லியன் பேர் என்ற கணக்கில் 16 மில்லியன் பார்வையாளர்கள் டீசரை கண்டு ரசித்தனர். மேலும் அதிக லைக்குகளை குவித்த டீசர் என்ற பெருமையும் கிடைத்தது. இந்நிலையில் இன்றைய தேதி வரையில் மாஸ்டர் டீசரை 4.2 கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக சன் டி.வி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து புத்தாண்டு பரிசாக டிரெய்லரை வெளியிட படக்குழு தீயாய் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.